Tuesday, 22 July 2008

நாயாறு கடற்பரப்பில் கடும் மோதல் - கடற்படையினருக்கு கடும் இழப்பு

முல்லைத்தீவு நாயாறுப்பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தமது கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் நுழைந்த கடற்படையினர் அணியொன்றை வழிமறித்த கடற்புலிகள் கடும் தாக்குதல் மேற்கொண்டு அவற்றை விரட்டியடித்ததாகவும் இதன்போது கடற்படையினர் பலத்த இழப்புடன் தப்பிச்சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1மணியளவில் கடற்படையினர் பலத்த இழப்புகளுடன் பின்வாங்கிச்சென்றதாக வன்னித்தகவல்கள் தெரிவிக்கின்றபோதிலும் விடுதலைப்புலிகளின் ஒரு படகை தாம் தாக்கியழித்ததாகவும் இரண்டு படகுகள் சேதமடைந்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் எதுவும் இதுவரை விடுதலைப்புலிகளிடம் இருந்து விடுக்கப்படவில்லை.

No comments: