Tuesday, 8 July 2008

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அம்புலன்ஸ் வண்டிகளுக்கு தட்டுப்பாடு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அம்புலன்ஸ் வண்டிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் கே.முருகானந்தன் தெரிவித்துள்ளார். தற்போது மூன்று அம்புலன்ஸ் வண்டிகள் உள்ளதாகவும் ஐந்து அம்புலன்ஸ் வண்டிகள் தேவையாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மாவட்டத்தில் அடிக்கடி நிகழும் சம்பவங்களால் அவசர நிமித்தமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நோயாளிகளை அவசரமாக எடுத்துச் சென்று சிகிச்சையளிப்பதில் அம்புலன்ஸ் பற்றாக்குறையினால் சிக்கல்நிலை தோன்றியுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது இவ்விதமிருக்க மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேச வீதியோரங்களில் சைக்கிள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைக்க வேண்டாமென பொலீசார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

இந்த உத்தரவினை மீறி நிறுத்தப்படும் சைக்கிள்கள் பொலீசாரினால் எடுத்துச் செல்லப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொலீசாரின் இந்த அறிவிப்பு பள்ளிவாசல் ஒலிபெருக்கிகள் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு இந்த நடைமுறையினைப் பின்பற்றுமாறு பொலீசாரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: