மன்னாரில் படையினர் இடங்களை கைப்பற்றுகின்றனரா அல்லது புலிகள் கைப்பற்ற விடுகின்றனரா என்ற சந்தேகம் எழுந்திருப்பதாக தெரிவித்துள்ள, சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவிரட்ன, 1994, 1995-களில் நடந்ததை படையினர் மறந்துவிட்டனரா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார். |
நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் நாளாந்தம் கடத்தல்கள் இடம்பெறுகின்றன. ஊடகங்கள் மீது அடக்குமுறை பிரயோகிக்கப்படுகிறது. இதனால் அனைத்துலக ரீதியில் இலங்கைக்கு நற்பெயர் இல்லாமல் போயுள்ளது. இந்நிலையை மாற்றியமைப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. புலிகளை தோற்கடிக்க ஒன்றிணையுமாறு விடுக்கப்படும் அழைப்பை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் எமது ஆதரவையும் சட்டத்தையும் அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது. குறிப்பாக ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறையை இந்த அரசாங்கம் அதிகப்படுத்தியிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளரான முன்னாள் இராணுவ அதிகாரியான ஜானக பெரேராவிற்கு அரசாங்கம் பாதுகாப்பை வழங்க மறுத்துள்ளது. ஆனால் அரசாங்கத்தின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள முதலமைச்சர் வேட்பாளருக்கு 30 படையினர் பாதுகாப்பு வழங்குகின்றனர். யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களில் முக்கிய பங்காற்றியவர் ஜானக பெரேரா. அவருக்கு தற்போதும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது. புலிகளின் தலைவர் பிரபாகரனை முதன்மைப்படுத்தியே அரசாங்கம் ஆட்சியை நடத்துகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர இன்னும் ஒருவருடம் தேவை என்கிறார் சரத் பொன்சேகா. மன்னாரில் பல இடங்களை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 1994, 1995-களில் நடந்ததை படையினர் மறந்துவிட்டனரா? மன்னாரில் படையினர் இடங்களை கைப்பற்றியுள்ளனரா அல்லது புலிகள் கைப்பற்ற விடுகின்றனரா? பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கும் தகவல்களை பார்த்தால் புலிகளின் தலைவர் வாலைச் சுருட்டிக்கொண்டு ஓடியிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லையே. மன்னாரில் புலிகளின் தளபதிகள் கொல்லப்படுவதாகக் கூறுகின்றனர். அப்படியானால் மன்னாரில் புலிகளின் மேஜர்களும் கப்டன்களும் குட்டி போடுகின்றனரா? மன்னாரில் புலிகள் பெருமளவில் கொல்லப்பட்டுள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது. ஆனால் அதில் எந்தளவு உண்மை உள்ளதென தெரியவில்லை. இந்திய உயர்மட்டக் குழுவினர் ஏன் இங்கு வருகை தந்தனர் என்று எதற்காக அரசாங்கம் அறிவிக்காமல் மௌனம் காக்கிறது? சட்டவிரோதமாக நாட்டைவிட்டு வெளியேறிய கருணா தற்போது மீண்டும் நாட்டுக்குள் வந்திருக்கிறார். அவர் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? வெள்ளை வான் கடத்தல்களை தனக்கு தெரியாது என்று காவல்துறை மா அதிபர் பொறுப்பற்ற வகையில் கருத்து தெரிவித்து வருகிறார். வான்படைக்கு என இன்று பாரிய நிதி வீண் விரயமாக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் வன்னிக்கு இரண்டு வானூர்திகள் செல்கின்றன. குண்டுகளையும் வீசுகின்றன. ஒரு வானூர்தி வன்னிக்குச் சென்றுவர ஒரு தடவைக்கு 5 லட்சம் ரூபா செலவாகிறது. அந்த வானூர்தி போடும் குண்டு ஒன்றின் விலை ஒரு லட்சம் ரூபாவாகும். ஓவ்வொரு வானூர்திகளும் தலா நான்கு குண்டுகளை ஒவ்வொரு நாளும் வன்னியில் போடுகின்றன. இப்படி நாளாந்தம் வான்படை நடத்தும் தாக்குதல்களுக்கென கோடிக்கணக்கான ரூபா பணம் வீண் விரயமாக்கப்படுகிறது. ஆனால் அரசாங்கம் இது குறித்து கவலையடைவதாகத் தெரியவில்லை என்றார் அவர். |
Tuesday, 8 July 2008
மன்னாரில் புலிகளின் தளபதிகள் கொல்லப்படுவதாகக் கூறுகின்றனர். அப்படியானால் மன்னாரில் புலிகளின் மேஜர்களும் கப்டன்களும் குட்டி போடுகின்றனரா?--லக்ஸ்மன் சென
Subscribe to:
Post Comments (Atom)

மன்னாரில் படையினர் இடங்களை கைப்பற்றுகின்றனரா அல்லது புலிகள் கைப்பற்ற விடுகின்றனரா என்ற சந்தேகம் எழுந்திருப்பதாக தெரிவித்துள்ள, சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவிரட்ன, 1994, 1995-களில் நடந்ததை படையினர் மறந்துவிட்டனரா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
1 comment:
Don't worry!
Tigers will drop bombs soon!
Post a Comment