Monday, 14 July 2008

மீராவோடை குண்டு வெடிப்பில் ஒருவர் காயம்

 மட்டக்களப்பு மீராவேடை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இப்பகுதியிலுள்ள மின்மாற்றிக்கு அருகில் குண்டு வெடித்துள்ளதாகவும், இதில் மின்மாற்றிக்கு சேதம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த நபர் ஓட்டமாவடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: