Monday, 7 July 2008

அமெரிக்க வல்லரசால் கூட புலிகளுக்கு தீய பழக்கங்களை ஏற்படுத்த முடியவில்லை - என்கிறார் திருமாவளவன்

 அமெரிக்க வல்லரசால் கூட புலிகளுக்கு தீய பழக்கங்களை ஏற்படுத்த முடியவில்லை. நமது மண்ணின் மீது வெறி வேண்டும். விடுதலை உணர்ச்சி வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சங்கராபுரம் ஒன்றியம் விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய பொருளாளர் எடிசன் தவமணி ஆகியோரின் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில், கடந்த 17 ஆண்டுகளாக மக்களை நெறிப்படுத்தி வருகிறேன். இன்னும் எதிர்பார்த்த அளவு ஆதிதிராவிட சமுதாயம் முன்னேற வில்லை. 15 வயதிலேயே இளைஞர்கள் குடிக்க பழகி 40 வயதில் மனைவியே மதிக்காத ஒரு நிலை ஏற்படுகிறது.

விஜயகாந்த் சொன்னால் கேட்கனும் என்ற நினைப்பு ஒரு சிலருக்கு உள்ளது. கட்சியை வளர்க்க புதிய உத்திகளை கையாண்டு வருகிறேன். நல்ல தலைவர்கள் யார் என்று தெரிந்து அடையாளம் காணவேண்டும். குடும்ப நிகழ்ச்சி என்றால் கட்சி பொறுப் பாளர்கள் மேடை ஏறக்கூடாது.

நமது மண்ணின் மீது வெறிவேண்டும் விடுதலை உணர்ச்சி இருக்க வேண்டும். இதுஉன்நாடு என்ற எண்ணம் மேலோங்க வேண்டும்.நல்ல மனமும், மூளையும் இருந்தால் அரசியலில் முன்னேறலாம். எந்த கெட்ட பழக்கமும் இல்லாததால் விடுதலை புலி கள் இன்றளவும் சாதிக் கிறார்கள். அமெரிக்க வல்லரசால் கூட விடுதலைப் புலிகளுக்கு கெட்ட பழக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. எனவே தமிழகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

1 comment:

ttpian said...

I am quite happy-atleast people like Thiruma admitted tigers as good people!