மிகின் லங்கா விமானசேவையின் பணியாளர்கள் தமது வேதனத்தை பெறமுடியாமல் பல மாதங்களாக இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமது வேதனங்களை உடனடியாக வழங்க வேண்டும் எனக்கோரி மிகின் லங்கா நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட அவர்கள் முடிவெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
ஏற்கனவே உயர் மட்ட அரசியல் தலைவர்களின் ஆதரவுடன், அரசாங்க வேலைத்திட்டமாக இந்த விமான சேவை நடத்தப்பட்டுவந்தது,
இந்த நிறுவனத்திற்காக அரசாங்கத்தின் பல வளங்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமையும், மிகின் லங்காவின் அதிகாரியும், ஜனாதிபதி மகிந்தவின் இணைப்பாளருமான ஷஜின் டி வாஸ் குணவர்த்தனவின் முகாமைத்துவ துஸ்பிரயோகங்களால் வங்குரோத்து நிலையை இந்த நிறுவனம் அடைந்துள்ளமையும் குறிப்படத்தக்கது.

No comments:
Post a Comment