Friday, 18 July 2008

வெள்ளை வேனை பிடிக்க வேண்டும் என்றால் ஐ.தே.க விற்கு வாக்களியுங்கள்!!!

வெள்ளை வான் கலாச்சாரத்தை இல்லாதொழித்து நாட்டில் சுபீட்சத்தை ஏற்படுத்த அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளுமாறு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

திவுலபிட்டிய நகர மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் அபிலாஷைகளை உதாசீனப்படுத்தி அவர்களை அடக்குமுறைக்கு உட்படுத்தும் இந்த அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு ஜனநாயகத்தை விரும்பும் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஷபக்ஷ குடும்பத்தை மட்டும் போஷிக்கும் இந்த ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வர அர்ப்பணிப்புடன் தாம் செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயல்களுக்கு எதிராக அஹிம்சை வழியில் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுக்கும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: