தலைநகர் கொழும்பில் குடிசை வீடுகள் இல்லையென வெளிக்காட்டிக் கொள்வதற்கு அரசாங்கம் அதீத முயற்சி மேற்கொண்டு வருவதாக ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி தெரிவித்துள்ளார்.
சுமார் 30 – 40 வருடங்கள் குறித்த பிரதேசத்தில் வசித்து வந்த மக்களை எவ்வித முன்னேற்பாடும் இன்றி வெளியேற்றியமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் கொழும்பில் வீடுகளை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும் வீடுகள் அமைக்கப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தலைநகர் கொழும்பில் சேரிகளோ குடிசை வீடுகளோ இல்லை என்பதை சார்க் தலைவர்களுக்கு வெளிக்காட்ட எடுக்கும் அதீத முயற்சியே இந்த அராஜக நடவடிக்கை என தெரிவித்துள்ளார்.
எந்தவிதமான திட்டமிடலையும் மேற்கொள்ளாது குறித்த பிரதேச மக்களை திடீரென வெளியேற்ற மேற்கொள்ளும் முயற்சி கண்டிக்கப்பட வேண்யதொன்றென லக்ஷ்மன் நிபுணாராச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை சார்க் மா நாடு நடக்கும் இரு நாட்களும் இந்திய பொருட்கள் விற்பனை செய்வதை புறக்கணிக்கும்படி கூறி இந்தியாவுக்கு எதிர்ப்பை காட்டுவதற்கான முஸ்தீபில் ஜேவிபி தலைமை முடிவெடுத்துள்ள்தாக ஜேவிபியின் முக்கிய வட்டாரங்களிலிருந்து கசிந்துள்ள்து.
இதே போன்ற் ஒரு நடவடிக்கையை இந்திய அமைதிபடை இலங்கையில் இருந்தகாலத்தில் செய்திருந்தது நினைவுகூரத்தக்கது.
Friday, 18 July 2008
சார்க் மா நாடு நடக்கும் இரு தினங்களும் இந்திய பொருட்கள் விற்பனைக்கு தடை போட ஜேவிபி முஸ்தீபு?
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment