Friday, 18 July 2008

பாகிஸ்தான் கப்பல் கொழும்புக்கு செல்லும் காலப்பகுதியில், இந்தியா கடற்படைக்கப்பலும் கொழும்பில் தரித்து நிற்கும்

பாகிஸ்தானின் கடற்படை கப்பல் ஒன்று எதிர்வரும் 28 ஆம் நாள் சிறிலங்காவின் தலைநகரான கொழும்பு துறைமுகத்துக்கு செல்லவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சார்க் உச்சி மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் கொழும்பு செல்லவுள்ள பாகிஸ்தானின் பேர் "குசா" என்ற இக்கப்பல், என்ன நோக்கத்துக்காக கொழும்பு செல்கின்றது என்பது குறித்து இதுவரை எதுவும் தெரியவரவில்லை. ஆனால், சீனாவிலிருந்து தாயகம் திரும்பும் இக்கப்பல், இடையில் கொழும்பில் தரித்துச்செல்வதாக மட்டும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

பாகிஸ்தான் கப்பல் கொழும்புக்கு செல்லும் காலப்பகுதியில், இந்தியா கடற்படைக்கப்பலும் கொழும்பில் தரித்து நிற்கும் என்று பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments: