Friday, 18 July 2008

தம்புள்ளவில் திடீர் தேடுதல் 3 தமிழ் பெண்கள் உட்பட 21 பேர் கைது

தம்புள்ள பிரதேசத்தில் பொலிஸாரும் இராணுவத்தினரும் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது மூன்று தமிழ்ப் பெண்கள் உட்பட 21 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தம்புள்ள பாதெனிய பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இத் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தம்புள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திஸ்ஸ லால் த சில்வா தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் சிலர் தம்புள்ள நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது அவர்களை 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்லுமாறும் அவர்களது ஆளடையாளத்தையும் வதிவிடத்தையும் உறுதிப்படுத்தக் கூடிய ஆவணங்களை சமர்ப்பிக்கமாறும் நீதிவான் நிமல் ரணவீர உத்தரவிட்டார்.

ஏனையோர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments: