Thursday, 17 July 2008

ரெலிக்கொம் முகாமையாளருக்கு பகிரங்கக் கேள்வி? யாழ்பாண பொதுமகன்

படைத்தளபதியாரே ரெலிகொம் முகாமையாளரே பதில் கூறுங்கள் கடந்த யூன் மாதம் நடுப்பகுதியில் இருந்து யாழ்மாவட்டத்திற்கான சீ.டி.எம்.ஏ தொலைபேசி சேவை செயலிழந்திருக்கின்றமை அனைவருக்கும் தெரிந்த விடயம்.

குறித்த தொலைபேசி இணைப்பினை பெறுவதற்கு நமது யாழ் மக்கள் எதிர்கொண்ட நடைமுறைகள் மற்றும் அலைச்சல்களும் நீங்கள்; அறிந்ததே.

இதுவரை சிறீலங்கா ரெலிகொம் நிறுவனம் இது குறித்து மக்களுக்கு முறைப்படி எதுவும் அறிவிக்கவில்லை இது விடயத்தில் தொடர்ந்தும் பொறுப்பற்றவகையில் மௌனம் சாதித்துக்கொண்டிருப்பது சிறீலங்கா ரெலிகொம்மினது யாழ் பிராந்திய முகாமையாளருக்கு அழகான விடயமல்ல.

மக்களின் பணத்தில் ஊதியம் பெறும் அதிகாரிகளின் இவ்வாறான செயற்பாடுகள் ஏற்கனவே பல வசதியீனங்களுடன் வாழும் யாழ் மக்களுக்கு பெரிதும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்pறது ஆயினும் துணிந்து எதிர்ப்பு கொடுக்க முடியாத சூழ்நிலைக்கைதிகளாக வாழ்கின்றனர்.

கைத்தொலைபேசி சேவையென்றாலென்ன சீ.டி.எம்.ஏ சேவையென்றாலென்ன எமது பணத்தினை சுரண்டுவதிலே குறியாயிருக்கின்றனவேயல்லாமல் மக்களுக்கு அதற்கான சேவையினை வழங்குவதில் முன்னிற்கவில்லை தொழில்நுட்பக்கோளாறு என ஒருசாராரும் பாதுகாப்பு தரப்பினரின் தடை என இன்னொரு சாராரும் காரணம் கூறிகொள்கின்றனர் ஆனால் உண்மையினை யாரும் தெரிவிக்கவில்லை.

ஊடகத்துறையினரும் அவ்வளவாக முக்கியத்ததுவம் கொடுத்ததாக தெரியவில்லை குறிப்பிட்ட ஒரு தொகுதி தொலைபேசிகள் வேலைசெய்கின்றன.

ஆனால் பொதுமக்கள்தான் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர். சாதாரண கேபிள் தொலைபேசிகள் வேலைசெய்கின்றன.

அவற்றை பெற்றிருப்பவர்கள் பின்பற்றியிராத நடைமுறைகளை பின்பற்றி பெறப்பட்ட சீ.டி.எம்.ஏ இணைப்புக்களுக்கு மாத்திரம் ஏன் இந்த நிலைமை? பாதுகாப்பு துறையினரின் தடையென்று இருந்தால் யாழ் பாதுகாப்பு படை தளபதிக்கு ஒரு பகிரங்க கேள்வி

" நீங்கள் பாதுகாப்பு அனுமதி வழங்கிய பின்னர் தானே இவ்வகை தொலைபேசிகள் வழங்கப்பட்டன அப்படியிருக்க ஏன் தடை செய்திருக்கின்றீர்கள் ? யாழ்மக்களின் வாழ்க்கையில் கரிசனை கொண்டிருப்பதாக கூறும் நீங்கள் அவர்களின் முதலுக்கு வேட்டு வைப்பதேன்?

செய்மதிதொலைபேசிகள் பயன்பாட்டில் உள்ள இக்காலத்தில்; சாதாரண சீ.டி.எம்.ஏ தான் போர் நடவடிக்கைகளுக்கு பயன்படுகின்றனவா? " தொழில்நுட்ப கோளாறு தான் காரணமென்றால் ரெலிக்கொம் முகாமையாளருக்கு பகிரங்கக் கேள்வி? "இவ்வளவு மக்களிடம் பணம்பெற்று சேவை வழங்கிய நீங்கள் அவர்கள் சேவையினை பெறுவதற்கான உத்தரவாதத்தினை வழங்காதது ஏன்?

உங்களுக்கு மட்டும் இணைப்பு இருந்தால் போதுமென்று கருதுகிறீர்களா? " கொழும்பு வாடிக்கையாளர் சேவையுடன் தொடர்பு கொண்டால் சேவை செயலிழந்தவிட்டதா என அதிசயமாககேட்டு பிராந்தியஅலுவலகத்ததுடக் தொடர்பு கொள்ளச் சொல்கிறார்கள் ஆனால் பிராந்திய அலுவலகம் அசட்டை செய்கிறது.

அச்சத்தில் வாழும் யாழ் மக்கள் எந்தப் புதிய நடைமுறைகளையும் எதிர்ப்பின்றி எதிர்கொள்ளும் சடங்களாக மாறிக்கொண்டிருக்க இவர்களின் உளவளத்ததை மட்டுமல்ல பொருளாதார வளத்தை கூட இரக்கமின்றி சுரண்டிக்கொண்டிருக்கும் சேவை வழங்குனர்களுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் மனச்சாட்சியே கிடையாதா?

-யாழ்பாண பொதுமகன்-
http://nitharsanam.com/?art=25286

No comments: