Thursday, 17 July 2008

ஜனாதிபதி செயலகம் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளது – பிரித்தானிய தூதரகம்

இலங்கைக்கு விஜயம் செய்த பிரித்தானியாவின் ஆசிய ஆபிரிக்க பிராந்தியத்திற்கான பிரதி வெளியுறவு அமைச்சர் மிலொக் பிறவுண் வெளியிட்ட கருத்துக்களை ஜனாதிபதி செயலகம் தவறாக பயன்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளதாக பிரித்தானிய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

ஊடக சுதந்திரம் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிக முனைப்பு காட்ட வேண்டுமென மிலொக் பிறவுண் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார் என தூதரகம் அறிவித்துள்ளது.

எனினும், மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பணிகள் காத்திரமானதெனவும், உலக நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் எனவும் மிலொக் பிறவுண் ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக ஜனாதிபதி செயலகம் தகவல் வெளியிட்டுள்ளமை தொடர்பில் பிரித்தானிய தூதரகம் விசனம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை முழுமையாக திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை என பிரித்தானிய தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இராஜதந்திர விவகாரங்களின் போது ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளை புறக்கணித்து இலங்கையின் ஜனாதிபதி செயலகம் ஒருதலைப்பட்சமாக அறிக்கை வெளியிட்டுள்ளதாக பிரித்தானிய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

No comments: