காலி- மாத்தறை தொடாரூந்து பாதை இந்தியாவுக்கு வழங்கும் ரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொடரூந்து ஊழியர்களின் உரிமை மற்றும் சொத்துக்களை பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டாளர் சுமதிபால மானவடு தெரிவித்துள்ளார்.
இதற்கான உடன்படிக்கை சார்க் மாநாடு நடைபெறும் போது கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் உடன்படிக்கையின் பின்னர் காலி- மாத்தறை தொடரூந்து பாதை 6 மாதங்கள் மூடப்படவுள்ளதாகவும் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக மானவடு குறிப்பிட்டுள்ளார்.
143 வருடங்கள் பழமைவாய்ந்த இலங்கை தொடரூந்துச் சேவையை இந்தியாவுக்கு தரைவார்க்கும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு கோரி போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகபெருமாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
Monday, 21 July 2008
காலி- மாத்தறை தொடாரூந்து பாதை இந்தியாவுக்கு தாரைவார்ப்பு - சுமதிபால மானவடு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment