Monday, 21 July 2008

இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்தோர் மீது புலிகள் தாக்குதல் - காவற்துறை

புத்தள ஒக்கம்பிட்டிய பகுதியில் இரத்தினக் கல் அகழும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கறுப்பு நிற உடையணித்த சிலர் யால வனாந்திரப் பகுதியில் வைத்து இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக புத்தள காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், இந்தத் தாக்குதலில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும், கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: