Monday, 21 July 2008

காணாமல் போன நான்கு இந்துக்களில் மூவர் சுட்டுப்படுகொலை

மன்னார் பள்ளமடுப்பகுதியில் வீடுகளில் பொருட்களை ஏற்றச்சென்ற போது காணாமல் போன நால்வரில் மூவர் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

வடபிராந்திய பார ஊர்திச் சங்கத்தின் பணியாளர்களான இவர்கள், கடந்த புதன்கிழமை (16.07.08) காணாமல் போய் இருந்தனர்.

இந்நிலையில் தற்போது இவர்கள் கொல்லப்பட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் மன்னார் மருத்துவமனையில் சிறிலங்காப் படையினரால் ஒப்படைக்கப்பட்டு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினால் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

கிளிநொச்சி விவேகானந்த நகரைச் சேர்ந்த கணபதி ஞானசீலன் (அகவை 29)

தர்மபுரம் 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இராமச்சந்திரன் தமிழ்வாணன் (அகவை 29)

கிளிநொச்சி இரத்தினபுரத்தைச் சேர்ந்த நடராஜா சிறீசாய்தரன் (அகவை 22)

ஆகியோரே படுகொலை செய்யப்பட்டவர்கள் ஆவர்.

காணாமல் போன வெள்ளாங்குளம் கணேசபுரத்தைச் சேர்ந்த மரிசாம்பிள்ளை ஈழவேந்தன் (அகவை 25) என்பவர் தொடர்பிலான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

No comments: