ஆசிய வீட்டுப் பணியாளர்கள் சவுதி அரேபியாவில் முறையற்ற விதத்தில் நடத்தப்படுவதைத் தடுக்க சவுதி அரேபியா மேலும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நியூயோர்க்கை தளமாகக்கொண்டு செயற்படும் மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கோரியுள்ளது.
சம்பளத்தை சரியாக வழங்காமை, பணியாளர்களைச் சிறை வைப்பது, மற்றும் அவர்களை உடல் ரீதியயாகவும், பாலியல் ரீதியாகவும் வன்முறைக்கு உள்ளாக்கல் போன்றவற்றுக்காக வேலை வழங்குபவர்கள் தண்டிக்கப்படாத நிலையில், சில சந்தர்ப்பங்களில் பணியாளர்கள் கிட்டத்தட்ட அடிமை நிலையில் பேணப்படுவதாகவும் அது கூறுகிறது.
திருடினார்கள், முறையற்ற உறவு வைத்திருந்தார்கள், அல்லது சூனியம் செய்தார்கள் என்று அவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி சில பணியாளர்களுக்கு சிறைத்தண்டனை அல்லது கசையடி வழங்கப்பட்டதாகவும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது.
பாதிக்கப்பட்ட பல பணியாளர்கள் சவுதி சமூக விவகார அமைச்சிடமோ, வெளிநாட்டுத் தூதரகங்களிடமோ தஞ்சமடைந்துள்ளதாகவும் அது கூறியுள்ளது.
ஆனால், இந்த அறிக்கை நியாயமற்றது என்றும், ஒரு பக்க சார்பானது என்றும், மனித உரிமைகளுக்கான சவுதி அரேபியாவின் தேசிய சங்கம் கூறியுள்ளது.
இது குறித்து சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதர், ஏ.எம்.எம். மெர்லின், அளித்த செவ்வியை நேயர்கள் இன்றைய தமிழோசையில் கேட்கலாம்.

No comments:
Post a Comment