சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உருவ பொம்மைக்கு மர்ம நபர்கள் தூக்கு மாட்டிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தி வரும் தாக்குதலைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை கடற்படையைக் கண்டித்து தமிழகம் தழுவிய அளவில் திமுக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியது.
இந்த நிலையில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உருவ பொம்மையை மர்ம நபர்கள் தூக்கில் தொங்க விட்டிருந்தனர். பொம்மையின் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டும் இருந்தது.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அந்த உருவ பொம்மையை அந்த இடத்தில் இருந்து அகற்றினர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
Monday, 21 July 2008
சேலத்தில் ராஜபக்சே கொடும்பாவிக்கு 'தூக்கு'!
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
soon it will be a reality
Post a Comment