Friday, 11 July 2008

மன்னாரில் படையினரின் முன்நகர்வு முறியடிப்பு: டாங்கி சேதம்

வெள்ளிக்கிழமை, 11 யூலை 2008

மன்னாரில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படையினரின் டாங்கி ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது.

மன்னார் நாயாற்று வெளிப்பகுதி ஊடாக இன்று வெள்ளிக்கிழமை காலை 7:30 மணியளவில் படையினரின் பின்தளங்களில் இருந்து பல்குழல் வெடிகணை, ஆட்லெறி எறிகணை மற்றும் டாங்கிகளின் சூட்டாதரவுடன் பள்ளமடு நோக்கி படையினர் முன்நகர்ந்தனர்.

முன்நகர்ந்த படையினர் மீது விடுதலைப் புலிகள் தீவிர எதிர்தாக்குதலை நடத்தி படையினருக்கு உயிரிழப்புக்களை ஏற்படுத்தினர்.

இதில் படையினரின் டாங்கி ஒன்று விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சேதமடைந்துள்ளது.

No comments: