மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வின்றி இருக்கும் அரசாங்கத்திற்கு அதனது அரசியல் இயலாமையை மறைக்க இராணுவம் மறைமுகமாக உதவி வருகிறதா என்ற சந்தேகம் தனக்கு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் தொடர்பில் அரசாங்கமும், இராணுவமும் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களை கூறிவருவதாகவும் அவர் கூறியுள்ளார். யுத்தத்தை கடந்த ஏப்ரல் மாதம் முடிவுக்கு கொண்டு வந்து மக்களுக்கு பாற்சோறு வழங்குவதாக ஜனாதிபதி கூறியிருந்தாhர்.
இந்த நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் யுத்தததை முடிவுக்கு கொண்டு வரமுடியும் என இராணுவதளபதி தெரிவித்திருந்ததுடன் தற்போது யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர மேலும் ஒரு வருடம் செல்லும் என இராணுவத் தளபதி கூறியுள்ளதாகவும் லக்ஸ்மன் கிரியல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை நோக்கும் போது யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் அரசாங்கத்தின் மூன்று மாத கால இலக்கும் மெதுவாக நீண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் இந்த கால பகுதியில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என அரசாங்கத்திற்கும் இராணுவ தளபதிக்கும் ஏன் குறிப்பிடமுடியாது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார். யுத்ததிற்கு மக்களின் பணமே செலவிடப்படுகிறது, இதற்கான அனுமதியை நாடாளுமன்றம் வழங்குகிறது.
இதனால் யுத்தம் தொடர்பான உண்மையை அறிய மக்களுக்கு உரிமை உள்ளது எனவும் போர் ரகசியங்களை வெளிப்படுத்தாது, யுத்ததின் குறைப்பாடுகளையும், தவறுகளை சுட்டிக்காட்டவும், அவற்றை விமர்சிக்கவும் சர்வதேச சட்டத்திட்டங்களுக்கு அமைய ஊடகங்களுக்கு உரிமை இருப்பதாகவும் லக்ஸ்மன் கிரியல்ல கூறியுள்ளார்.

No comments:
Post a Comment