‘பொங்கு தமிழாக’ இலண்டன் மண்ணில் அணிதிரள்வதற்கு,
பிரித்தானியா வாழ் தமிழீழ உறவுகள் எழுச்சிக்கோலம் பூண்டுள்ளனர்.
தமிழீழ தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை ஆகிய அதியுயர்
வேட்கைகளை இதயங்களில் சுமந்து, நாளை சனிக்கிழமை
இலண்டன் மண்ணில் பல்லாயிரக்கணக்கில் அணிதிரள்வதற்கு,
பிரித்தானியா வாழ் தமிழீழ மக்கள் எழுச்சி கொண்டுள்ளனர்.
இலண்டனின் தென்மேற்கேயுள்ள ‘றோஹாம்ப்ரன் வேல்’ பகுதியில் அமைந்திருக்கும், ‘றிச்சார்ட் இவான்ஸ்’ விளையாட்டுத் திடலில், மாலை 3:00 மணிக்கு
ஷபொங்கு தமிழ்| எழுச்சிப் பேரணி முன்னெடுக்கப்படுகின்றது.
இதில், பல்லாயிரக்கணக்கில் அணிதிரள்வதற்கு, பிரித்தானியாவின்
பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் தமிழீழ உறவுகள் தயாராகியுள்ளனர்.
‘பொங்கு தமிழாக’ அணிதிரளும் தமிழீழ உறவுகளின் நலன்கருதி,
இலண்டனின் பல்வேறு பகுதிகளிலும் பேருந்து வண்டிகள் ஒழுங்கு
செய்யப்பட்டுள்ள அதேவேளை, தன்னெழுச்சியுடன் தமது
ஊர்திகளில் இணைந்து கொள்வதற்கும் பலர் உத்தேசித்துள்ளனர்.
இதனிடையே, ‘பொங்கு தமிழாக’ எழுச்சி கொண்டு நிற்கும்
புலம்பெயர்வாழ் தமிழீழ உறவுகளுக்கு, தனது வாழ்த்துக்களை
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்
அவர்கள் உரித்தாக்கியிருப்பதோடு, பெருமிதமும் கொண்டிருப்பதாக,
தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment