தேசிய பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வௌவின் கண்டி பகுதியிலுள்ள வீட்டை டிஜிட்டல் கமெரா மூலம் வீடியோ படம் எடுத்த தமிழ் இளைஞர் ஒருவரை கண்டி பொலீசார் கைது செய்து தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த செவ்வாயன்று பகல் இளைஞர் ஒருவர் அமைச்சரின் வீட்டை வீடியோ படம் எடுப்பதாக பொலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த பொலீசார் குறித்த தமிழ் இளைஞனைக் கமராவுடன் கைது செய்துள்ளனர்.
கண்டியில் பிரதான வங்கியொன்றில் கணனி பிரிவு ஊழியராக கடமையாற்றும் இவ்விளைஞர் தமது டிஜிட்டல் கமரா மூலம் அமைச்சரின் வீட்டை முழுமையாக படம் பிடித்திருப்பது பொலீசாரின் சோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொலீசார் மேற்படி தமிழ் இளைஞரை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Friday, 18 July 2008
கெஹலிய ரம்புக்வௌவின் வீட்டை வீடியோப் படம் பிடித்தவர் பொலீசாரால் கைது
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment