எதிர்வரும் “சார்க்” மாநாட்டுக்காக வெளிநாட்டு படையினரை இலங்கைக்கு அழைக்கும் செயலானது, இலங்கையின் படைத்தரப்பினரைக் கேலிக்குள்ளாக்கும் செயல் என ஜே வி பி தெரிவித்துள்ளது. ஜே வி பியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு தலைவர்களின் பாதுகாப்புக்காக அவர்களின் மெய்பாதுகாவலர்கள் அழைத்து வரப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியது. எனினும் பெருந்தொகை வெளிநாட்டு படையினர் அழைத்து வரப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது இலங்கையின் இறைமையைப் பாதிக்கும் செயல் என்றும் அநுரகுமார குறிப்பிட்டார். அரசாங்கம் ஏன் இந்தியாவில் இருந்து மூவாயிரம் படையினரை இலங்கைக்கு அழைத்து வர அனுமதித்தது என அவர் கேள்வி எழுப்பினார்.

No comments:
Post a Comment