Friday, 18 July 2008

மன்னாரில் படையினரின் நடவடிக்கை முறியடிப்பு: 7 படையினர் பலி- 15 பேர் காயம்

சனிக்கிழமை, 19 யூலை 2008
மன்னார் மாவட்டத்தில் உள்ள குருந்தன்குளம் பகுதியில் நடவடிக்கை மேற்கொண்ட சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி முறியடித்தனர். இதில் ஏழு படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 15-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.

குருந்தன்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 9:00 மணிமுதல் பிற்பகல் 4:00 மணிவரை விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் மோதல் நடைபெற்று படையினரின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது.

இதில் ஏழு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 15-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ஆயுத விவரம்:

ஏகே எல்எம்ஜி - 01
இணைப்பிகளுடன் ரவைகள் - 550
ரம் ரவைக்கூடு - 01
தலைக்கவசங்கள் - 06
குண்டுகள் - 10
திசைகாட்டி - 01
தண்ணீர் கொள்கலங்கள் - 05
கத்திகள் - 02
மண்வெட்டிகள்-02

ஆகியன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments: