Thursday, 3 July 2008

இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டுமெனக் கோரி இந்தியாவில் ஆர்ப்பாட்டம்

யுத்தசூழ்நிலை காரணமாக இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக சென்றுள்ள தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் எனக் கோரி தமிழ் நாட்டில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.

தொல் திருமாளவனின் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சியினால் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

25 வருடங்களுக்கு மேல் தமிழகத்தில் வசித்துவரும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டுமென மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் வசிக்கும் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் வெளிநாட்டவர்கள் போன்று நடத்தப்படுவதகாவும், தமிழர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

மேலும், கடந்த 25 வருடங்களாக அகதிகளாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக திருமாவளன் தெரிவித்துள்ளார்.

சொத்துக்களை கொள்வனவு செய்வது தொடர்பான சட்டங்களில் இலங்கை அகதிகளுக்கு சலுகை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

1 comment:

ttpian said...

good move!
we need recognition for the tamil
people world wide!
come on Thiruma!
support Tamileelam!