Wednesday, 2 July 2008

தடுப்புக்காவலில் இருந்த முத்துசாமி இலங்கோவனை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

ilango-singapore.jpgவிடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் தொடர்புகளை வைத்திருந்ததுடன் அவர்களுக்கு உதவிகளை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, தடுப்பு காவல் உத்தரவின் பேரில் 100 நாட்களுக்கு மேலாக காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முத்துசாமி இலங்கோவனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.


கொழும்பு இலக்கம் 5 நீதவான் நீதிமன்ற நீதவான் மஞ்சுள திலக்கரட்ன இந்த உத்தரவைப்பிறப்பித்தார். சிங்கபூர் பிரஜையான இலங்கோவன், ஐரிஸ் மோனா கப்பலின் உரிமையாளருமாவார்.

இவர்கள் இலங்கை வந்திருந்த போது சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டதுடன் அவரிடம் இருந்து பிரபாகரனுடன் முல்லைத்தீவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் கைப்பற்றபட்டது.

இலங்கோவனுக்கும் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகிக்கும் கே.பிக்கும் இடையில் தொடர்புகள் இருப்பது விசாரணைகளில் தெரியவந்தது.

இதனையடுத்து மேலதிக விசாரணைகளுக்காக அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் இலங்கோவன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது, அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி பண்டார ஏக்கநாயக்க சந்தேக நபர் 90 நாட்களுக்கு மேலதிகமாக காவல்துறையினரின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர் தொடர்பான விசாரணைகள் எந்தளவுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்து இதுவரை அறிக்கையிடப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

சந்தேகநபர் வெளிநாட்டவர் என்பதால், அவருக்காக ஆஜராகவும் உதவவும் எவரும் இல்லாத நிலையில் சந்தேகநபரை விளக்கமறியில் வைக்குமாறு நீதாவனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சந்தேக நபரை தொடர்ந்தும் தடுப்பு காவலில் வைக்குமாறு காவல்துறையினர் கோரிய போதும் அதற்கேதுவான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்கவில்லை.

இதனையடுத்து காவல்துறையினரின் கோரிக்கையை நிராகரித்த நீதவான் சந்தேகநபரை எதிர்வரும் 16ஆம திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபரை அன்றைய தினமே நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறும் சிறைச்சாலை ஆணையாளருக்கு நீதவான் உத்தரவிட்டார். சந்தேக நபர் சார்பில் பண்டார ஏக்கநாயக்க, மஞ்சுள பத்திராஜ, உபாலி ரஞ்சித் காரியவசம் ஆகிய சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

No comments: