Saturday, 5 July 2008

சித்தாண்டியில் ரீஎம்.வீ.பீ உறுப்பினர் பலி,ஏறாவூரில் துப்பாக்கிச் சூடு - இருவர் காயம்

மட்டக்களப்பு சித்தாண்டிப் பகுதியில்

இடம் பெற்ற துப்பாக்கி வெடிப்பு சம்பவத்தில் ரீ.எம்.வீ.பீயின் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று (யூலை4) மாலை 6.30 அளவில் சித்தாண்டி முகாமில் தமது உறுப்பினர் வைத்திருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்ததாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு ஏறாவூரில்

இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு 8 மணியளவில் ஏறாவூர் மஹமதியா வீதியில் உரையாடிக் கொண்டிருந்த இந்த இளைஞர்கள் மீது மோட்டார் சைக்கிளில் சென்ற இனம் தெரியாத ஆயுதாரிகள் நடத்திய சரமாரியான துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவவம் இடம்பெற்ற பகுதியில் இருந்து 400 மீற்றர் தொலைவில் காவற்துறை மையம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் 23 வயதுடைய மொஹமட் முபீன், 21 வயதுடைய மொஹமட் வாஹிட் ஆகியோர் காயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணகளை நடத்தி வருகின்றனர்.

No comments: