விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை உளவு பார்ப்பதற்காக யு.ஏ.வி. எனப்படும் ஆட்களின்றிச் செல்லக்கூடிய கண்காணிப்பு விமானம் ஒன்றை சிறிலங்கா விமானப்படை இஸ்ரேலிடமிருந்து கொள்வனவு செய்திருப்பதாக அறிவிக்கப்படுகின்றது. கடந்த அக்டோபர் மாதம் அநுராதபுரம் விமானப் படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் அழிக்கப்பட்ட விமானத்துக்குப் பதிலாகவே இது கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது.
புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்டுள்ள உளவு விமானம் வடபகுதி யுத்த முனையில் புலிகளின் நடமாட்டம் மற்றும் படையினருக்கு எதிராக அவர்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் என்பவற்றை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக கிளாலி, முகமாலை மற்றும் நாகர்கோவில் முன்னணிக் காவல் நிலைகள் அமைந்திருக்கும் பகுதிகளிலேயே இதனுடைய கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வன்னிப் பிராந்தியத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக படையினர் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளைப் பொறுத்த வரையில் உளவு விமானத்தின் வரவு மிகவும் முக்கியமானது என படை வட்டாரங்கள் தெரிவித்தன. யுத்த முனையில் விமானப் படை இரண்டு விதமான பணிகளை மேற்கொண்டுவருகின்றது. ஒன்று – விடுதலைப் புலிகளுடைய இலக்குகளை இனங்கண்டு அவற்றைத் தாக்கி அழிப்பது. இரண்டாவது - தரையில் நடவடிக்கைகளை மேற்கொண்டள்ள படையினரக்கு உதவும் வகையிலான தாக்குதல்களை நடத்துவது. இந்த இரண்டு விடயங்களிலும் குறிப்பிட்ட உளவு விமானத்தின் பங்களிப்பு முக்கியமானதாக இருப்பதாக விமானப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆட்களின்றிச் செல்லக்கூடிய இந்த உளவு விமானங்கள் 1996 ஆம் ஆண்டுப் பகுதியிலேயே முதல் முறையாக சிறிலங்கா விமானப் படையில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
இவ்வாறான விமானங்களில் பல விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டன. அல்லது தொலை இயக்கிகளைப் பயன்படுத்தி தமது பகுதிகளுக்குள் அவற்றை அவர்கள் இறக்கியிருக்கின்றார்கள். இவை அனைத்தையும்விட அநுராதபுர விமானத்தளத் தாக்குதலின் போதுதான் பல உளவு விமானங்கள் அழிக்கப்பட்டன.
Tuesday, 15 July 2008
ஆட்களின்றிச் செல்லும் உளவு விமானம் இஸ்ரேலிடமிருந்து கொள்வனவு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment