Tuesday, 15 July 2008

விடுதலைக்காக போராடுபவர்களின் பக்கம் தான் அமெரிக்கா இருக்கும் புஷ் அறிவிப்பு ???

விடுதலைக்காக போராடுபவர்களின் பக்கம் தான் அமெரிக்கா எப்போதும் இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி புஷ் அறிவித்தார். இதை சீன அதிபர் ஹிï ஜிண்டாவோவிடமும் தெரிவித்து விட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.

மத சுதந்திரம் கிடையாது

சீனாவில் மத சுதந்திரம் கிடையாது. கம்ïனிஸ்டு நாடு என்பதால் எந்த மதத்துக்கும் அரசு ஆதரவு கிடையாது. கிறிஸ்தவ மதம் வெளிப்படையாக செயல்படவில்லை.

அந்த நாட்டில் ஒரு அங்கமாக இருக்கும் திபெத்தில் தனி நாடுகோரி போராட்டம் வலுத்து உள்ளது. சீனாவில் உள்ள உயிகுர் முஸ்லிம்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு விடுதலை கோரி போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் விடுதலைக்காக போராடும் இயக்கங்களுக்கு ஆதரவாக தான் நாங்கள் இருப்போம் என்று அமெரிக்க ஜனாதிபதி புஷ் தெரிவித்து இருக்கிறார்.

வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புஷ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சீன அதிபரிடம் தெரிவித்தேன்

கடந்த வாரம் ஜப்பானில் சீன அதிபர் ஹிï ஜிண்டாவோவை சந்தித்து பேசினேன். அப்போது அவரிடம் விடுதலைக்காக போராடுபவர்கள் இருக்கும் வரை அமெரிக்கா அவர்கள் பக்கம் தான் இருக்கும் என்று தெரிவித்தேன்.

தலாய் லாமாவின் தைரியத்தை நான் பாராட்டுகிறேன். திபெத்தில் வசிக்கும் பவுத்தர்கள் துணிச்சலுடன் போராடி வருகிறார்கள்.

சீனாவில் மத சுதந்திரத்துக்காக போராடுபவர்களை நாங்கள் இந்த நேரத்தில் நினைவு கூர்கிறோம். அவர்களை கவுரவிக்கிறோம்.

உய்க்கூர் மாநிலத்தில் வசிக்கும் முஸ்லிம்களையும் நாங்கள் கவுரவிக்கிறோம். சீனாவில் பாதாள தேவாலயங்களில் நடக்கும் பிரார்த்தனை கூட்டங்களில் கலந்து கொள்பவர்களை சந்திக்க முடிந்தது.

கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்

துருக்மெனிஸ்தான், வியட்னாம் ஆகிய நாடுகளில் கடந்த சில ஆண்டுகளில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்த சுதந்திரத்தை பெறாமல் இன்னும் எத்தனையோ லட்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள்.

எரீட்ரீயா சூடான் ஆகிய நாடுகளில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள். வடகொரியாவில் மதவழிபாடு நடத்துபவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்.

இந்த நாடுகளின் தலைவர்கள் மதசுதந்திரத்தை மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். விருப்பமான கடவுளை வழிபட மக்களுக்கு உள்ள உரிமைகளை மதித்து நடக்கவேண்டும்.

இவ்வாறு புஷ் கூறினார்.

தமிழர் விடுதலைப்போராட்டம் மட்டும் தீவிரவாதமா புஷ் ஐயா???

No comments: