அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறையின் கோரிக்கைக்கு இணங்க, அவுஸ்திரேலிய காவல்துறையினரால் தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெல்பேர்ண் வர்த்தகக் கல்லூரியின் இயக்குனரான 34 அகவையுடைய துளசிதரன் சந்திரராஜா என்பவரே கடந்த திங்களன்று கைது செய்யப்பட்டார். இவரது வீடு, மெல்பேர்ண் அனைத்துலக கல்லூரி உட்பட பணிபுரியும் இடங்களும்,
5 வீடுகளும் அவுஸ்திரேலிய காவல்துறையினரால் சோதனையிடப்பட்டுள்ளன. அமெரிக்க அரசின் வேண்டுகோளுக்கு அமைவாகவே தாம் இவரைக் கைது செய்து தடுத்து வைத்திருப்பதாக, அவுஸ்திலேய சட்டமா அதிபர் றொபேட் மைக்கிளீலன்ட் தெரிவித்தார்.
மெல்போன் நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்ட துளசிதரன் சந்திரராஜா அடுத்த மாதம்வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
துளசிதரனுடன் அவரது நண்பர்கள் சிலரும் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை செய்யப்பட்ட போதிலும், அவர்கள் அனைவரும் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
http://www.nitharsanam.com/?art=25274
Wednesday, 16 July 2008
அமெரிக்கா மத்திய புலனாய்வுப்பிரிவின் தகவலில் தமிழ் வர்த்தகர் மெல்பேர்னில் கைது - அவருடன் கைது செய்யப்பட்ட இன்னொரு தமிழ் வர்த்தகர் பிணையில் விடுதலை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment