Saturday, 5 July 2008

கரும்புலிகள் நாள் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

கரும்புலிகள் நாள் நிகழ்வு இன்று காலை 9.00 மணியளவில் கிளிநொச்சி பொது மைதானத்தில் இதுவரை காலமும் விடுதலைப்போரிலே தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய கரும்புலி மாவீரர்களின் நினைவு சுமந்த உணர்வெழுச்சியுடன் மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பொதுச்சுடரினை பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் துனைவியார் ஏற்ற தமிழீழ தேசியக் கொடியினை நீதி நிர்வாகப் பொறுப்பாளர் பரா ஏற்றினார். தொடர்ந்து கரும்புலிகள் பொதுப்படத்திற்கு தமிழீழ நிர்வாக சேவைப் பொறுப்பாளர் இசையமுதன், கப்டன் மில்லர் படத்திற்கு ப.தெ.கூ. சங்கம் த.சந்திரன், கப்டன் அங்கயற் கன்னி படத்திற்கு ப.தெ.கூ. சங்கம் வே. நடராசா ஆகியோர் ஈகைச் சுடரினை ஏற்றி வைத்தனர்.










நிகழ்வில் மலர் மாலையினை கரைச்சி தெற்கு க. உமா, திரு. காசிநாதன், கரைச்சி வடக்கு தலைவர் தி. தணியாசலம் ஆகியோர் அணிவித்தனர். மலர் வணக்கத்தினை மாவட்ட கூட்டுறவு சபை செயலாளர் திரு.க.சிவகுமார் ஆரம்பித்து வைத்தார். அதனை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.






இந்நிகழ்வின் போது தலைமையுரையினை யாழ். பொது அமைப்பு ஒன்றியத் தலைவர் ப.கனகலிங்கம், நினைவுரையினை கூட்டுறவு சங்க பொது செயலாளர் சீ. துரைசிங்கம் ஆகியோர் ஆற்றினர்.
இரவு நிகழ்வுகள் 6.45 மணிக்கு ஆரம்பமாகும். இரவு 7.05 மணிக்கு ஈகச்சுடரேற்றப்படும். தொடர்ந்து திருவுருவப்படத்திற்கான மலர்மாலை அணிவித்தல், மலர்வணக்கம், தலைமையுரை, நினைவுரை, கலை நிகழ்வுகள் என்ற ஒழுங்கமைப்பில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

No comments: