தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் களையப்பட வேண்டுமென அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பிள்ளையான் குழுவினரின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் எனவும், சிறுவர் போராளிகள் இணைத்துக் கொள்ளப்படுவது நிறுத்தப்பட வேண்டும் எனவும் அமெரிக்காவின் பிரதித் தூதுவர் ஜேம்ஸ் அர்மூர் தெரிவித்துள்ளார்.
இலங்கை வர்த்தகச் சம்மேளன அதிகாரிகளுடன் நேற்றைய தினம் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் நியாயமற்ற முறையில் நடைபெறுவதாகவும், அரசியல் தலையீடுகள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தக் கூடிய வரலாற்றுச் சந்தப்பம் அரசாங்கத்திற்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கிழக்கில் துணை இராணுவக் குழுக்கள் இயங்குவதாகவும், இதனால் கிழக்கு மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment