விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி பெறும் கட்டத்தை நெருங்கிக் கொண் டிருப்பதாக அரசாங்கம் தென்னிலங்கை மக்க ளிடத்தில் நம்பிக்கையூட்டிக் கொண்டிருக்கி றது.
ஆனால், தற்போது நடைபெற்று வரு கின்ற நான்காவது கட்ட ஈழப்போரில் அரபடைகளுக்கு ஏற்பட்டிருக்கின்ற இழப்புகள் எவ்வளவு என்பது பற்றிய சர்ச்சைகள் நீடித்துக் கொண்டே இருக்கின்றன.
இந்த சர்ச்சைகளுக்குக் காரணம், அரசாங்கத் தரப்பில் உள்ள பொறுப்பு வாய்ந்த அமைச்சர் கள் அல்லது அவர்களின் கீழ் உள்ள அமைச் சுக்களின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மற் றும் படைத் தளபதிகளேயன்றி வேறு யாரும் கிடையாது.
சுயாதீனமாகத் தகவல்களைத் திரட்டி ஊட கங்களில் படைத்தரப்பு இழப்புகள் குறித்து கட்டுரைகளை எழுதி வந்த ஊடகவியலாளர் கள் மிரட்டப்பட்டு,
தாக்கப்பட்டு, கடத்தப் பட்டு, கொல்லப்பட்டு வந்த நிலையிலும், அவர்கள் துரோகிகள் என்று பட்டம் சூட்டப் பட்ட நிலையிலும் தற்போது அத்தகைய செய்திகள் எழுதப்படுவதில்லை.
பாதுகாப்பு நிலைவரம் என்ற பெயரில், படைத்தரப்பு தக வல்களை மட்டுமே பலரும் எழுதி வரு கின்றனர்.
அதே வேளை படைத் தரப்பு மற்றும் அர சாங்கத் தரப்பு என் பன வெளியிடு கின்ற தகவல்களின் அடிப்படையில் தற் போதைய போர் நிலைவரங்களை மதிப்பீடு செய்து பார்க்கலாம்.
இராணுவத் தளபதி லெப்.ஜென ரல் சரத் பொன் சேகா கடந்தமாத இறுதியில், வெளி நாட்டுச் செய்தியாளர் சங்கத்தின் ஊடகவிய லாளர்களைச் சந்தித்த போது தெரிவித்த கருத் துக்களை முன்னிறுத்தி இந்தப் பத்தி எழுதப் படுகிறது.
புலிகள் மரபுவழி இராணுவமாகச் செயற்பட முடியாதளவுக்குத் தோற்கடிக்கப் பட்டு விட்டதாக இராணுவத் தளபதி தெரிவித்த கருத்தை விலக்கி, போரின் இழப்புகள் பற்றிய கருத்தை மையமாகக் கொண்டு இப் பத்தி வரையப்படுகிறது.
கடந்த 2006 ஓகஸ்ட் 11ஆம் திகதி முகமாலையில் சமர் வெடித்த பின்னர், 9000 புலி கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், படையினர் தரப்பில் 1700 பேர் கொல்லப்பட்டு 4000 பேர் வரை காயமடைந்திருப்பதாகவும் தெரிவித்த இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன் சேகா, காயமுற்ற படையினரில் அரைவாசிப் பேர் மீளவும் படைப்பிரிவுகளில் இணைந் திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதன்படி கடந்த 23 மாதங்களில் 1700 படையினரை படைத்தரப்பு இழந்திருக்கிறது.
ஆனால், இதே இராணுவத் தளபதி லெப்.
ஜெனரல் சரத் பொன்சேகா கடந்த ஜனவரி 11ஆம் திகதி பாதுகாப்பு செய்தியாளர்களுக்கு தனது இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த இராப் போசன விருந்தின்போது, 2006 ஓகஸ்ட் 11ஆம் திகதிக்குப் பின்னர், ஒன்றரை வருடங் களில் 800 படையினர் கொல்லப் பட்டு, 4000 படையினர் காயமுற்றிருப்பதாகக் குறிப்பிட் டிருந்தார். அப்போதும், காயமுற்ற படையினரில் அரைவாசிப்பேர் குணமடைந்து களம் திரும்பியிருப்பதாகவே கூறியிருந்தார்.
முதலில் கொல்லப்பட்ட படையினர் தொடர்பான புள்ளி விபரங்களை உள்ளடக் கிய தான ஒரு ஆய்வுக் குச் செல்லலாம்.
2006 2008இல் படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்கள் மாதம் இறந்த படையினர் காயமுற்ற படையினர் ங்ஞீட்தணீ 2008 68 468 ணஞ்ஞ்;தட்தணீ 2008 104 822 டுடத;ணூ; 2008 93 676 ஙஞ்;ததூ; 2008 120 945 ண்டு 2008 138 549 ங்நிஞீ; 2008 112 793 ணடுடடீ;டீடு; 635 4253 குறிப்பு மேற்படி தரவுகள் நாடாளுமன்றத்தில் பிர தமர் அவசர காலச்சட்ட நீடிப்பு விவாதத்தில் தெ?வித்தவற்றின் தொகுப்பாகும்.
ஓகஸ்ட் முதல் 2007 டிசம்பர் வரையான 17 மாதங்களில் கொல்லப் பட்ட படையினரின் தொகை 800 ஆகும்.
இக்காலத்தில் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 47 படையினர் கொல் லப்பட் டிருக்கின்றனர்.
(இது இராணுவத் தளபதியின் தகவலை அடிப் படையாகக் கொண்டதே).
ஆனால் 2008 ஜனவரி முதல் ஜூன் வரை யான 6 மாதங்களில் கொல்லப்பட்டிருக் கின்ற படையினரின் எண்ணிக்கை 900 (1700800) ஆகும். இதன்படி மாதம் ஒன்றுக்கு சராசரியா கக் கொல்லப்பட்டிருக்கின்ற படையினரின் எண்ணிக்கை 150 ஆகும்.
கடந்த ஜனவரிக்கு முற்பட்ட 16 மாதங்க ளில் கொல்லப்பட்ட ஒட்டுமொத்த படையினரின் எண்ணிக் கையை விடவும் அதிகமான படையினர் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
அத õவது படையினரின் இழப்பு இந்த வருடத்தில் மும்மடங்கை எட்டியிருக்கிறது என்பது குறிப் பிடத்தக்கது.
போர் தீவிரம் பெற்றதால் மட்டும் இந்த இழப்பு எண்ணிக்கை அதிகரித்ததாகக் கருத முடியாது.
பல முனைகளில் தீவிரப்படுத்தப் பட்ட தாக்குதல் நிலைப் போர் காரணமாகப் படைத்தரப்பு இழப்புகள் அதிகரித்திருக்கின்றன.
ஆனால் அத்தகைய இழப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்ற புலிகள் தரப்பும் பலமானதாக இருக்க வேண்டும்.
புலிகளைப் பொறுத் தவரையில் பலவீன மடைந்து விட்டதாக படைத்தரப்பு கூறிக் கொண்டிருக்க இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 900 படை யினரை அவர்கள் கொன்றிருப்பதானது அவர்களின் பலத்தை இன்னொரு கோணத் தில் மதிப்பிட உதவி யிருக்கிறது.
பலவீனமடைந்து, ஆயுதங்கள் கிடைக்கா மல், படையினர் முன் னேறும்போது பின் வாங்கி, தப்பிஓடும் புலிக ளால் நிச்சயமாக படையினருக்கு இந்த இழப் புகளை ஏற்படுத்த முடியாது.
எனவே புலிக ளின் பலம் மற்றும் பலவீனம் பற்றிய கருத்துக் களின் அடிப் படையே இங்கு ஆட்டம் காண்கிறது.
அதேவேளை, இன் னொரு புள்ளிவிபரத் தையும் இங்கு பார்க்க லாம்.
நாடாளுமன்றத்தில் மாதாந்தம் அவசர காலச்சட்ட நீடிப்பு விவாதத்தை ஆரம் பித்து, பிரதமர் ரட்ண சிறி விக்கிரமநாயக்க உரையாற்றுவார்.
முன்னைய மாதத்தில் நிகழ்ந்த மோதல் களில் கொல்லப்பட்ட காயமுற்ற படையினரின் விபரங்களைத் தெரிவித்து பயங்கர வாதி களை ஒடுக்க அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு உதவ வேண் டும் என்றும் அவர் கோருவது வழக்கம்.
இதன்படி 2008 ஜனவரி முதல் ஜூன் வரை யான 6 மாதங்களில் புலிகளுடனான போரில் கொல்லப்பட்ட படையினரின் எண்ணிக்கை 635ஆகும். (மாதாந்த புள்ளிவிபரங்கள் பெட் டிக்குள்) இது பிரதமரின் நாடாளுமன்ற உரைக ளில் அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட எண்ணிக்கை.
இராணுவத் தளபதியின் எண்ணிக்கைக்கும் பிரதமரின் எண்ணிக்கைக்கும் இடையில் காணப்படுகின்ற வேறுபாடு 235 ஆகும் (900635). இருவரது கணக்குகளின் அடிப் படையிலும் பார்த்தால் மாதம் ஒன்றுக்கு கொல் லப்பட்ட படையினரின் சராசரி எண்ணிக்கை 106ஐ விடவும் அதிகமாகும்.
இதுவே புலிக ளுடனான போர் எந்தளவுக்கு அரசதரப்புக்குச் சாதகமாகச் செல்கிறது என்ற சந்தேகத்தை எழுப்பப் போதுமானதொரு விடயமாகும்.
புலிகள் இயக்கம் முற்றிலும் தற்காப்பு நிலையில் இருக்கின்ற போது ஏற்பட்டிருக் கின்ற இழப்புகள் தான் இவை என்பதும், அவர்கள் தாக்குதல் நிலைக்குத் திரும்பும் போது இந்தத் தொகை கணிசமாக உயர வாய்ப்புகள் உள்ளதையும் மறுக்க முடியாது.
அடுத்ததாக காயமுற்ற படையினர் பற்றிய தகவல்களைப் பார்க்கலாம். 2006 ஓகஸ்ட் முதல் 2007 டிசம்பர் வரையான காலத்தில் காயமுற்ற படையினரின் தொகை 4000 எனத் தெரிவித்த அதே இராணுவத் தளபதி இப் போதும், 2006 ஓகஸ்ட் முதல் 2008 ஜுன் வரையான 23 மாதங்களில் 4000 வரையான படையினர் காயமடைந்ததாகத் தெரிவித்துள் ளார்.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் பிரதமர் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், இந்த ஆறு மாதங்களிலும் காயமுற்ற படையினரின் விபரங்களைத் திரட்டியபோது,
அந்தத் தொகை 4000 ஐயும் தாண்டி நிற்கிறது. 4253 படையினர் இந்த ஆறு மாதங்களில் காயமடைந்திருக்கின்றனர்.
இராணுவத் தளபதியின் தகவலின்படி 2007 டிசம்பருக்கு ?ந்திய 17 மாதங்களில் 4000 படையினர் காயமடைந்திருந்தனர்.
இதன்படி மாதம் ஒன்றுக்கு காயமடைந்த படையினர் தொகை 235ஆகும். ஆனால் இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் காயமடைந்த படையினரின் சராசரி எண்ணிக்கை 709 ஆகும்.
இதன்படி கடந்த ஆறு மாதங்களில் காயமடையும் படையினரின் எண்ணிக்கையும் மும்மடங்கால் அதிகரித்திருக்கிறது.
இதுவும்கூட போரின் தீவிரத்தை நிரூபித்து நிற்கும் ஒரு குறியீடாகவே உள்ளது. புலிகள் பலமிழந்து படையினரின் கை ஓங்கிக் கொண்டிருந்தால் படையினர் தரப்பு இழப்புகள் குறைந்திருக்க வேண்டும்.
இந்த ஆறு மாதங்களிலும் சராச?யாக 859 (150+709) படையினர் கொல்லப்பட்டு அல்லது காயமுற்று களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதாவது, இலங்கை இராணுவத்தின் ஒரு பற்றாலியனின் நியம அளவு படையினரின் எண்ணிக்கைக்கு இது சமமாகும்.
அடுத்து கடந்த 23 மாத காலத்திலும் கொல்லப்பட்ட அல்லது காயமுற்ற படையினரின் மொத்த எண்ணிக்கை 9953 (1700+8253) ஆகும். இது இலங்கை இராணுவத்தின் ஒரு டிவிசன் நியமஅளவு படையினரின் எண்ணிக் கைக்குச் சமமாகும்.
இதில் காயமுற்ற படையினரில் அரைப்பங் கினர் (4126) மீளவும் படைப்பிரிவுகளில் இணைந்திருப்பார்கள் என்று வைத்துக் கொண்டால்கூட, 5827 (1700, 4127) படையினரை இந்தக் காலத்தில் அரசபடைகள் முற்றாகவே இழந்திருக்கின்றன.
இந்த எண்ணிக்கையானது தற்போது இராணுவத்தில் உள்ள குறைநிலை டிவிசன்களின் (அதிரடிப்படை1, அதிரடிப்படை2) ஆளணிவளத்தை விடவும் அதிகமாகும்.
போர் தீவிரமான கட்டத்தை அடைந்திருக்கின்ற நிலையில் இராணுவத் தளபதியின் கணிப்புப்படி, போரை முடிவுக்குக் கொண்டுவர இன்னும் ஒரு வருடம் செல்லும் என்றால் தற்போதுள்ளதைப் போன்ற படையினர் தரப்பு இழப்புகளும் அதிகரித்தே செல்லும்.
இவ்வாறு ஆயிரக்கணக்கான படையினரைப் பலி கொடுத்தும் காயங்களால் நிரந்தர ஊனமாக்கியும் இந்தப் பிரச்சினைக்கு முடிவுகட்ட முடியும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் கிடையாது.
உயிர்ப்பலிகளைக் கணக்குக்காட்டி நடத்தப்படும் இந்த யுத்தத்தில் அரச தரப்புக்கு வெற்றி கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட் டாலும் சரி இதன் வடுக்களில் இருந்து மீள நீண்ட காலம் எடுக்கும் என்பதே உண்மை.
Saturday, 12 July 2008
யுத்த களமுனையில் அதிகரிக்கும் இழப்புகள்-வீரகேசரி சுபத்ரா
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment