அம்பாறை மாவட்டத்தில் உள்ள மொனறாகல சாலையில் சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இது தொடர்பில் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
பொத்துவில் - மொனறாகல சாலையில் உள்ள செங்காமம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7:25 மணியளவில் சுற்று நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த படையினர் மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் சம்பவ இடத்திலேயே படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். காயமடைந்தவர்களில் ஒருவர் காலை இழந்துள்ளார். இருவர் பின்னர் உயிரிழந்துள்ளனர்.

No comments:
Post a Comment