கிழக்கு மாகாணசபை முதலமைச்சராக இருந்து இலங்கைப் படையுடன் இணைந்து செயற்பட்டு வரும் பிள்ளையானை அழிப்பதற்கு முன்னாள் துணைப்படைத் தலைவரான கருணா முயற்சித்து வருகின்றார் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. |
இது தொடர்பில் அந்த நாளேட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிரித்தானியாவின் குடிவரவுச் சட்டத்தை மீறியதற்காக அங்குள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கருணா; விடுதலைப் புலிகளுக்கு உதவிகளைப் புரிந்து பிள்ளையானை அழிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார் என்று கிழக்கிலிருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவித்துள்ளன. கிழக்கு மாகாணசபைத் தேர்தலைக் கருணா எதிர்த்ததுடன், பிள்ளையானை அதில் போட்டியிட வேண்டாம் என்றும் கருணா தெரிவித்திருந்ததாகவும் பிள்ளையான் தன்னையும் மீறி ஜனாதிபதியுடன் இணைந்து கொண்டது கருணாவுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்ததாகவும் அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் மூன்று மாதங்களில் விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதலைக் கிழக்கில் நடத்தலாம் என்று பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்களும் தெரிவித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கிழக்கில் தாக்குதல்களை தீவிரப்படுத்தப் போவதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்திருந்தார். . இதனைத் தொடர்ந்து கிழக்கில் படையினர் பாதுகாப்புக்களைப் பலப்படுத்தி வருகின்றனர். |
Wednesday, 2 July 2008
பிள்ளையானை அழிப்பதற்குக் கருணா முயற்சி: "த பொட்டம்லைன்" வார ஏடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment