Thursday, 3 July 2008

கருணா நாடு திரும்பியுள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரான கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று லண்டனில் இருந்து நாடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனிலிருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்ட கருணா இன்று வியாழக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை சென்றடைந்தார் என்றும்

பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டஇதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா நேற்றுக் கொழும்பை வந்தடைந்தபோது மாற்றுப் பெயர் ஒன்றிலேயே வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருணாஇ அந்தனி என்ற பெயரிலேயே இலங்கைக்கு வந்துள்ளார். யு எல் 504 என்ற இலக்கத்தைக்கொண்ட விமானத்தில் ஸ்கொட்லன்ட்யாட் காவல்துறையினர் என நம்பப்படும் நால்வரால் அழைத்து வரப்பட்ட கருணாஇ இலங்கையின் காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டார்.

அங்கிருந்து பிரித்தானிய அதிகாரிகளின் பாதுகாப்புடன் கருணா அம்மான் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டிருப்பதை கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கை வந்திருக்கும் கருணா அம்மான் தொலைபேசி மூலம் தன்னைத் தொடர்புகொண்டு கதைத்ததாக கருணாவால் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பேச்சாளர் ஆசாத் மௌலானா பி.பி.சி. செய்திச்சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

கருணா அம்மான் இலங்கைக்குத் திரும்புவார் என்பதைத் தாம் ஏற்கனவே எதிர்பார்த்திருந்ததாகக் குறிப்பிட்ட அவர், அனைவரும் இணைந்து செயற்படவேண்டுமென்பதை கருணா வலியுறுத்தியதாகவும் கூறினார்.

கிழக்குப் பகுதி மக்களுக்கு உதவிகளைச் செய்துகொள்வது என்ற கொள்கையின் அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படப்போவதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அவருடன் அரசியல் குழு கூடி ஆராயும் என ஆசாத் மௌலானா கூறியுள்ளார்.

வடபகுதியைக் கைப்பற்றுவதற்கு உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே கருணா அம்மான் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தார்களே என பி.பி.சி. செய்திச் சேவை, ஆசாத் மௌலானாவிடம் கேள்வியெழுப்பியிருந்தது. எனினும், தம்மைப் பயன்படுத்தியே வடக்கைக் கைப்பற்றவேண்டுமென்ற தேவை அரசாங்கத்துக்கு இல்லையென ஆசாத் மௌலானா பதிலளித்தார்.

அத்துடன், தற்பொழுது இலங்கை திரும்பியிருக்கும் கருணா அம்மானுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி வழங்கப்படாது எனவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பேச்சாளர் ஆசாத் மௌலான பி.பி.சி. செய்திச்சேவைக்குக் கூறியிருந்தார்.

கிழக்கிலும் தலைநகர் கொழும்பிலும் இடம்பெற்ற அப்பாவி பொதுமக்கள், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள் ஆகியோர் படுகொலைகள், கடத்தல், கப்பம் போன்ற சம்பவங்களின் முக்கிய சூத்திரதாரியான இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து பிரிந்து சென்ற இன்னொரு துணைப்படைக் குழுத்தலைவரே தற்போது கிழக்கு மாகாண முதலமைச்சராக சிறிலங்கா அரச தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: