மட்டக்களப்பு புகையிரதநிலையத்தில் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (யூலை03) வியாழக்கிழமை மாலை 8.15 மணியளவில் இடம்பெற்ற இந்த வெடிப்பில் மூன்று காவல்துறையினரும் இருபொதுமக்களும் காயமடைந்துள்ளனர்.
கொழும்பு நோக்கிச் செல்லும் புகையிரதம் இரவு 7.30 மணிக்கு தொடரூந்து நிலையத்தை விட்டகன்றுள்ளது. இதன்போது 25 வயதுடைய செல்வகுமார் 26 வயதுடைய சாருரூவன் ஆகிய தமிழ் காவல்துறையினரும் ஒரு சிங்கள காவல்துறையினரும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த பொதுமக்களில் ஒருர் பாடசாலை மாணவனைகிய
16 வயதுடைய அசார் எனவும,; காயமடைந்த மற்றய பொதுமகன்
30 வயதுடைய அப்துல் மஜீட் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் முதலில் ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மட்டக்களப்பு ஆசிரியர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment