யாழ்ப்பாணத்தின் திவக பகுதியில் வைத்து விடுதலைப்புலிகளின் கண்ணிவெடி தாக்குதலில் லெப்டினன் ஜெனரல் டென்சில்கொப்கேகடுவ, மேஜர் ஜெனரல் விஜய விமலரட்ன ஆகியோர் உயிரிழந்த நிலையில், அந்த சம்பவத்தில் இரண்டு கால்களை இழந்த நிலையில் உயிர்தப்பிய முன்னாள் இராணுவ சிப்பாயான உபாலி விஜேகோன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில், வடமத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துளளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை அலரி மாளிகையில் நேற்று சந்தித்த விஜேகோன் நாட்டின் பாதுகாப்புக்காக உயிர் மற்றும் உடல் பாகங்களை தியாகம் செய்தவர்களுக்கு மதிப்பை ஏற்படுத்தும் நோக்கில், வடமத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்ததாக கூறினார் எனவும் ஜனாதிபதி செயலகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் சேனைகளின்; தளபதி என்ற வகையில் ஜனாதிபதி பயங்கரவாதத்தை தோற்கடிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கடந்த காலங்களில் நாட்டின் தலைவர்கள் உண்மையான தலைமைத்துவத்தை வழங்கியிருந்தால், பயங்கரவாதத்தை முழுமையாக தோற்கடித்திருக்கலாம் எனவும் உபாலி விஜேகோன் தெரிவித்தாh
என்றும் ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஜனக்க பெரேராவுக்கு எதிராகவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இந்த முன்னாள் இராணுவச் சிப்பாயை களத்தில் இறக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment