Friday, 4 July 2008

தரிசனம் என்ற பெயரில் புலிகள் புதிய வானொலிச் சேவையொன்றை ஆரம்பித்துள்ளனர்-திவயின


தமிழீழ விடுதலைப் புலிகள் தரிசனம் என்ற பெயரில் புதிய வானொலிச் சேவையொன்றின் மூலம் ஐரோப்பில் ஒலிபரப்புச் சேவையை ஆரம்பித்துள்ளனர். இஸ்ரேலிலிருந்து இதுவரையில் ஒளிபரப்புச் செய்யப்பட்ட தரிசனம் தொலைக்காட்சி சேவை ரத்து செய்யப்பட்டதனைத் தொடர்ந்து இந்த புதிய வானொலிச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வானொலிச் சேவையும் இஸ்ரேலை மையமாகக் கொண்டு கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புலிகளின் ஆயுதக் கொள்வனவு உள்ளிட்ட பல்வேறு பிரசார நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு தரிசனம் தொலைக்காட்சி சேவை இயங்கி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தரிசனம் வானொலிச் சேவை லண்டனில் உள்ள புலிகளின் அலுவலகமொன்றின் ஊடாக கட்டுப்படுத்தப்படுவதாகத் திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

No comments: