கடந்த மாதம் வெள்ளவத்தை மற்றும் பாமன்கடைப்பகுதியில் படையினரும், இராணுவத்தினரும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்ட 14 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என இலங்கைத் தொழிலாளர் கொங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இலங்கை தொழிலாளர் கொங்கிரஸ் வெள்ளவத்தை காவல்துறையினரிடம் தொடர்புகொண்டு பேசியுள்ளதாகவும், ஆனால் கல்கிஸ்ஸை நீதிமன்றம் விசாரணைகளின் பின்னர் குறிப்பிட்ட சந்தேக நபர்களில் பலரை விடுதலை செய்துள்ளதாகவும் வெள்ளவத்தை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment