Friday, 4 July 2008

கட்சிகளில் உள்ள குறைபாடுகளை மூடிமறைப்பதற்கு வேலைநிறுத்தப் போராட்டம்

கட்சிகளில் உள்ள குறைபாடுகளை மூடிமறைப்பதற்காக தொழிற்சங்க போராட்டங்களை ஏற்பாடு செய்வதாக ஊடக மற்றும் தகவல் அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாபா தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி. மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றுக்கு தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பாக கறைபடிந்த வரலாரே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வகையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

1980ம் ஆண்டு இடம்பெற்ற ஜூலை தொழிற்சங்க போராட்டத்தின் போது பல அரச ஊழியர்களின் உயிர்களை ஐக்கிய தேசியக் கட்சி காவு கொண்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஜே.வி.பி. காட்டிக் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த கட்சிகளின் உட்பூசல் நிலைமைகளை மூடிமறைப்பதற்கு மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிகளுக்கு துணை போக வேண்டாம் என அமைச்சர் அனுரபிரியதர்சன யாபா அரச ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments: