கிழக்கின் தென்பகுதியிலிருந்து கண்டி மற்றும் கொழும்பு செல்லும் சகலரும் அம்பாறை மகாஓயா சோதனைச் சாவடியைக் கடந்தே செல்ல வேண்டும். இவ்வாறு செல்லும்போது மகாஓயா சோதனைச் சாவடியில் தமிழர்கள் மட்டும் வேறாகப் பிரித்தெடுக்கப்பட்டுத் துருவித்துருவி கடுஞ்சோதனைக்குள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். கடுஞ்சோதனையின்போது அவரது பெயர் விலாசம் அடையாளஅட்டை இலக்கம் கொழும்பு செல்வதற்கான காரணம் அங்கு தங்குமிடம்? எத்தனை நாட்கள் கொழும்பில் தங்குவது? எப்போது திரும்புவது? போன்ற பல விபரங்கள் விலாவாரியாகக் கேட்டுத் தனியான கொப்பியில் பதியப்படுகின்றன. இவை அனைத்தும் ஏனைய சிங்கள முஸ்லிம் பிரயாணிகள் பார்த்திருக்கக்கூடியவாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இது ஓர் அப்பட்டமான மனிதஉரிமை மீறலெனத் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனையெல்லாம் நாடாளுமன்றத்தில் பேசுவதுமில்லை. அலட்டிக்கொள்வதுமில்லையென தமிழ்மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். |
Tuesday, 22 July 2008
அம்பாறை மகாஓயா சோதனைச் சாவடியில் தமிழர்களை வேறாகப் பிரித்துக் கடுஞ்சோதனை: மனித உரிமை மீறலெனத் தெரிவிப்பு.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment