ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ திருப்பதி ஏழுமலையான்
தேவஸ்தானத்தில் நடைபெற உள்ள சிறப்பு பூஜைகளில் கலந்துகொள்வதற்காக நேற்றிரவு அவசரமாக இந்தியாவுக்கு சென்றுள்ளார்.
ஜனாதிபதி சார்பில் பூஜைகளுக்கான ஏற்பாடுகளை குமார் நடசேன் மேற்கொண்டதாகவும் நடடேசனும் ஜனாதிபதியுடன் இந்தியாவுக்கு சென்றுள்ளதாகவும் ஜனாதிபதிக்கு நெருங்கிய தரப்பு தகவல்கள் தெரிவிப்பதாக அந்த சிங்க ஊடகம் தெரிவித்துள்ளது.
திருப்பதியில் பூஜைகளை முடித்து கொண்ட பின்னர் ஜனாதிபதி புதுடெல்லிக்கு செல்ல உள்ளார். ஜனாதிபதி புதுடெல்லியில் இந்திய தலைவர்களை சந்தித்து பேச்சுக்களை நடத்தவுள்ளார் என ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டிருந்த போதிலும்
இந்தியாவின் காங்கிஸ் அரசாங்கம் தற்போது அரசியல் பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் நிலையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உத்தியோபூர்வமாக ஜனாதிபதி மகிந்த ராஜாபக்ஸவை சந்திக்க மாட்டார் என்றே கூறப்படுகிறது.
இந்தியாவில் ஆளும் காங்கிஸ் கூட்டணியில் இருந்து இடதுசாரிகள் விலகி கொண்டுள்ளதை அடுத்து, நாடாளுமன்றத்தில் பெருபான்மையை நிரூபிக்குமாறு இந்திய ஜனாதிபதி அரசாங்கத்தை கேட்டுள்ளார்.
பெருபான்மை பலத்தை நிரூபிக்க இந்திய காங்கிரஸ் கட்சி தவறும் பட்சத்தில், அங்கு நாடாளுமன்றம் கலைக்கப்படும், இவ்வாறான நிலைமை ஏற்பட்டால் சார்க் மாநாட்டை உத்தேசித்த திகதியில் இலங்கையில் நடத்துவதிலும் சிக்கல் ஏற்படலாம் என கருதப்படுவதாக அந்த சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.
எனினும் ஜனாதிபதியுடன் குமார் நடேசன் சென்றாரா? என்பது கேள்வியாக உள்ளது. காரணம் குமார் நடேசன் இன்று (யூலை11) இலங்கையில் தனது அலுவலகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 comment:
appadiye indiavai "mottai" podalam!
Post a Comment