Sunday, 13 July 2008

ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அரசு இந்தியாவிடம் மண்டியிட்டுள்ளது - ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் குற்றச்சாட்டு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இந்தியாவிடம் மண்டியிட்டுள்ளது.

இந்தியாவின் தேவைக்காக புதியதொரு அரசியலமைப்பினை உருவாக்குவதற்கு அரசாங்கம் முனையுமானால், அதனை எதிர்த்துப் போராடி தடுத்து நிறுத்துவோம் என்று ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

1987ஆம் ஆண்டு பலாத்காரமாக எமது நாட்டுக்குள் புகுந்து உயிரிழந்த இந்தியப் படையினருக்கு நினைவுத்தூபி அமைக்கும் நிலைக்கு ஜனாதிபதி மஹிந்தவின் அரசாங்கம் மண்டியிட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

இலங்கையின் இனப்பிரச்சினையின் தீர்வுக்கு புதிய அரசியலமைப்பின் தேவையை அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண வலியுறுத்தியுள்ளது தொடர்பாக ஜே.வி.பி.யின் நிலைப்பாட்டை தெரிவித்தபோதே அதன் பொது செயலாளர் ரில்வின் சில்வா இதனைத் தெரிவித்தார்.

No comments: