Thursday, 3 July 2008

யுத்த காலத்தில் புலிகள் கூட என் குடும்பத்தாரை அச்சுறுத்தவில்லை ஜனநாயக நாட்டில் வேட்பாளராக நிற்கும் போது அச்சுறுத்தப்படுகிறேன்

""முதலமைச்சர் பதவிக்காக மாகாணத் தேர்தலில் போட்டியிடுவதால் என்னையும், என் குடும்பத்தாரையும் சிலர் அச்சுறுத்துகின்றனர். ஆனால், இவற்றுக்கு நான் பயந்தவனல்ல.

பல வருடங்களாக விடுதலைப் புலிகளுடன் போரிட்டவன் நான். இந்த யுத்த காலத்தில் புலிகள் கூட என் மனைவியையோ, பிள்ளைகளையோ அச்சுறுத்தவில்லை.

ஆனால், ஜனநாயக நாட்டில் தேர்தலொன்றின் வேட்பாளராக நிற்க முயற்சிக்கும் போது எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. இந்த நிலையை மாற்றியமைக்கும் ஆரம்ப முயற்சியாக இத்தேர்தலை நாம் பயன்படுத்த வேண்டும்.'' இவ்வாறு வடமத்திய மாகாண சபைக்காக ஐ.தே.க. சார்பில் முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளரான மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா தெரிவித்தார்.

வடமத்திய மாகாண சபைக்கான தேர்தல் பிரசாரக் கூட்டத்தைக் கடந்த புதன்கிழமை அநுராதபுரத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், பௌத்த கலாசாரத்தின் பிறப்பிட மாகவும், புராதன அரசர்கள் காலத் தில் பிரதான பிரதேசமொன்றாக வும் காணப்பட்ட "ரஜரட்ட' இன்று பின்தங்கிய பிரதேசமொன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையினை மாற்றியமைத்து ரஜரட்ட பகுதியை எமது நாட்டின் முக்கியமானதொரு பிரதேசமாகக் கட்டியெழுப்பும் நோக்கிலேயே இம்முறை மாகாண சபைத் தேர்த லில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட முடிவு செய்தேன்.

என்னை வடமத்திய மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாள ராகப் போட்டியிட முன்னிற்க வேண்டாம் எனவும், அவ்வாறு முன்னிற்காத பட்சத்தில் உயர் பதவி யொன்றைத் தருவதாகவும், வெளி நாட்டுப் பயணங்கள் பலவற்றுக்கு சந்தர்ப்பம் பெற்றுத் தருவதாகவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. எனினும், அவை எனது தனிப்பட்ட நலன்களுக்காகக் கிடைக்கும் வரப்பிரசாதங்கள். அவற்றினால் பொது மக்களுக்கு சேவை செய்ய முடியா கின்றார்கள். நான் அலுவலகச் சிற்றூழியனாகவே எனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினேன்.

அலுவலக சிற்றூழியர் தொழில் என்பது எவ்வாறான தொழில் என்பது உங்களுக்கு நான் சொல்லவேண்டியதில்லை. நானும் மிகவும் சிரமத்துக்கு மத்தியிலேயே பல்வேறு இடர்களைக் கடந்து மேஜர் ஜெனரல் வரை பதவி உயர்வு பெற்றேன். எனவே, எனக்கு ஏழைகளின் துயர் பற்றி வேறு யாரும் சொல்லித் தரவேண்டியதில்லை.

உங்களுக்கும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படலாம். அச்சுறுத்தல்களுக்குப் பயந்தால் நாம் நினைத்ததைச் சாதிக்கமுடியாமல் போகும்.

எனவே, அச்சமின்றி செயற்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிபெறச் செய்வோம் என்றார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறு ப்பினர்களான பீ. ஹரிசன், சந்திராணி பண்டார உட்பட பெருமளவிலான ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

No comments: