1 நாள் நீடித்த ஆசியான், சீன-ஜப்பானிய-தென் கொரிய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டமும் கிழக்காசிய உச்சி மாநாட்டின் வெளியுறவு அமைச்சர்களது அதிகாரப்பூர்வமற்ற கலந்தாலோசனையும், நேற்று சிங்கப்பூரில் நடைபெற்றன.
இதில் கலந்து கொண்டோர், கம்போடிய மற்றும் தாய்லாந்து எல்லை பிரச்சினை பற்றிய நிலையைக் கேட்டறிந்துள்ளனர். மிகப் பெரிய அளவிலான கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு, அமைதியான வழிமுறையில் இப்பிரச்சினையைத் தீர்க்குமாறு அவர்கள் இரு தரப்புக்கும் வேண்டுகோள் விடுத்தனர்.
இக்கூட்டம், உயர்ந்து வரும் எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களின் விலை, கால நிலை மாற்றம் ஆகியவை ஏற்படுத்திய கடுமையான அறைகூவல்கள் பற்றியும் விவாதித்தது. தகவல்களை பகிர்ந்து கொள்ளவும்,
உறுப்பு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புகளை வலுப்படுத்தவும் வேண்டுகோள் விடுப்பதாக கூட்டங்களில் வெளியிடப்பட்ட இரு தலைவர் அறிக்கைகள் சுட்டிக்காட்டின.
கொரியத் தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மையை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ள 6 தரப்புப் பேச்சுவார்த்தைக்கு, இக்கூட்டத்தில் கலந்து கொண்டோர் தங்களது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
சீனாவின் வென் ச்சுவான் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பெருமளவிலான உயிரிழப்புக்கு அவர்கள் அனுதாபம் தெரிவித்தனர்.
தவிர, சீனா 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர் என்று அறிக்கைகள் கூறின.
எரியாற்றல் பாதுகாப்பு, கால நிலை மாற்றம் முதலிய பிரச்சினைகள் பற்றி, சீன வெளியுறவு அமைச்சர் யாங் சியே ச்சி, சீன அரசின் கருத்தை வெளியிட்டுள்ளார்.
கால நிலை மாற்றம் பற்றிய ஐ.நாவின் கட்டுக்கோப்பு ஒப்பந்தம் மற்றும் கியோடோ உடன்படிக்கையின் கோரிக்கையின்படி, பொது ஆனால் வேறுபட்ட பொறுப்புகள் என்ற கோட்பாட்டில் ஊன்றி நின்று, Bali நெறிவரைத்திட்டத்தை நிறைவேற்றுவது பற்றிய பேச்சுவார்த்தையை ஆக்கப்பூர்வமாக முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை இலங்கை மந்திரி பேசுவதற்கான நேரம் வந்ததும் அதிகளவான உறிப்பினர்கள் மாநாட்டை விட்டு வெளியேறி ஓய்வெடுக்க சென்றுவிட்டனர்
இது அண்மையில் சீனாவுடன் ஏற்பட்ட எண்னை அகழ்வு தொடர்பான இராஜதந்திர சிக்கலின் முதல் அடி என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்

No comments:
Post a Comment