ஊடகவியலாளர்கள் படையினர் மீது சேறுபூசுகின்றனர், இராணுவத்தளபதி மீதும் சேறுபூச முயற்சின்றனர் இதனால் இந்த கர்மங்களுக்கான பலன்களை அனுபவிக்கும் போது, இராணுவத் தளபதிகள் மீது குற்றம் சுமத்துகின்றனர் என இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
கீத்நொயார், நாமல் பெரேரா, இக்பால் அத்தாஸ் ஆகியோர் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் இராணுவ தளபதி மீது குற்றம் சுமத்தப்படுவது குறித்து
லக்பிம ஞாயிறு இதழக்கு வழங்கியுள்ள செவ்வியில் குறிப்பிட்டுள்ளாhர். இந்த ஊடகவியலாளர்கள் இராணுவத் தளபதிக்கோ, இராணுவத்திற்கோ ஏதேனும் தவறு செய்திருப்பர், இதனால் யாரேனும் தாக்கும் போது, அவர்களின் மனசாட்சியின்படி தாம் தவறு செய்தோம் என அவர்கள் உணர்ந்து கொண்டபோது,
இராணுவமே தம்மை தாக்கியதாக கூறுகின்றனர் என சரத் பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார். தவறு செய்தவர்களின் மனதில் தற்போது இவ்வாறான உணர்வுகள் ஏற்பட்டு வருகிறன என தான் நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தம்மீது குற்றம்சுமத்துவோர் நியாயமான காரணங்களையோ சாட்சியங்களையோ ஒருபோதும் முன்வைக்க போவதில்லை என தெரிவித்துள்ள இராணுவத்தளபதி இந்த குற்றச்சாட்டுகள் தன் மீது சேறுபூசுவதற்காக முன்வைக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களை தாக்குவது இராணுவத் தளபதியின் கீழ் செயற்படும் குழுவென ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோசப் மைக்கல் பெரேரா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள சரத் பொன்சேக்கா படையினரின் முன்னேற்றத்திற்கு தடையேற்படுத்த அவருக்கும் காரணங்கள் இருப்பதால்,
தன்மீது கெட்ட குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்திருக்காலம் என தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளின் நோக்கம் யுத்தத்தை நிறுத்தி அரசாங்கத்தை வீழ்த்துவதாகும். நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்புள்ள பிரஜை என்றால், அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்து விட்டு,
வெளியில் அமைதி காத்து கொண்டிராமல், நாட்டின் சட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்கதிருக்க வேண்டும். தனக்கு எதிரான சாட்சியங்கள் இருந்தால் ஜோசப் மைக்கல் பெரேரா அதனை காவல்துறையினர், நீதிமன்றம் மற்றும் பாதுகாப்பு அமைச்சிடம் முன்வைக்கலாம். இது பெரிய குற்றச்சாட்டு, இருந்தும் ஏன் அவர் உரிய நடவடிக்கை எடுக்காதிருக்கிறார் எனவும் இராணுவத்தளபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமது வாய்க்கு வந்தவற்றை பேசுகின்ற, குறை கூறுகின்ற மனிதர் இந்த நாட்டில் ஏராளமானோர் உள்ளனர். அவர்களின் வாய்களை தம்மால் மூடமுடியாது எனவும் நாய் குரைக்கிறது என்றால் எவரும் நாயின் வாயை மூட முயற்சிப்பதில்லை எனவும் சரத் பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment