மஹிந்த ராஜபக்ஷவின் அரசிற்கு ஆதரவாக செயற்பட்டு ஐக்கிய தேசிய கட்சியினரையும் மக்களையும் கொடுமைப் படுத்துபவர்கள்
எதிர்கால ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியின் போது கடுமையக தண்டிக்கப்படுவர் என்று ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷட எம்.பி லக்ஷமன் கிரியல்ல நேற்று தெரிவித்திருந்தார்
எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இவர் இதுதொடர்பாக கூறியவை வருமாறு வடமத்திய மாகாணசபைக்கு எமது கட்சிகள் சார்பில் போட்டியிடும் முதலமைச்சர் வேட்பாளரான ஜெனரல் ஜானக பெரேராவிற்கு இன்னும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை
அவருக்கு புலிகளின் கொலை அச்சுறுத்தல் இருக்கிறது யாழ்ப்பாணத்தை மீட்பதற்காக உயிரைப் பணயம் வைத்துப் போராடினார்.
தாய் நாட்டுக்காக போராடிய அவருக்கு இந்த அரசு பாதுகாப்பு வழங்க மறுக்கிறது புலிகளால் அவருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும் என்றே இந்த அரசு விரும்புகிறது அப்படி ஏதும் நடந்தால் அதற்கான முழுப்பொறுப்பையும் மஹிந்த ராஜபக்ஷவே ஏற்க வேண்டும்.
அதேவேளை மாகாணத்தில் அரசு சார்பில் போட்டியிடும் பேர்டி பிரேமலாவின் பாதுகாப்புக்கு நூறு பேர் நியமிக்கப் பட்டுள்ளார்கள் மறுபுறத்தல் பொலிஸாரும் அரசுக்கு சார்பாக செயற்படுகின்றனர்
அவர்கள் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் மீது அடாவடித்தனங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர் எமது கட்சியினரையும் நாட்டு மக்களையும் கொடுமைப் படுத்துபவர்கள் எதிர்காலத்தில் எமது ஆட்சிக் காலத்தில் கடுமையாக தண்டிக்கப் படுவார்கள் என்றார்.
Saturday, 19 July 2008
இப்போது ஐக்கிய தேசிய கட்சியை கொடுமைப் படுத்துவோர் பிற்காலத்தில் தண்டிக்கப் படுவர் -அக்கட்சி எம்.பி ஆவேசம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment