Saturday, 19 July 2008

அரச களஞ்சியங்களில் உணவுப்பொருட்கள் கையிருப்பு இல்லாமையால் உணவுப் பொருட்களின் விலைகள் குடாநாட்டில் அதிகரிப்பு!

அரச களஞ்சியங்களில் அத்தியாவசிய உணவுப்பொருட்களது கையிருப்பு போதியளவு இல்லாமையால் யாழ். குடாநாட்டில் அவற்றின் விலைகள் என்றுமில்லாத அளவில் அதிகரித்துச் செல்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

தற்போது முழுமையாக தனியார் வர்த்தகர்களது இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்க வேண்டியிருப்பதால் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அதிகாரிகளும் உள்ளனர்.

சீனி, கோதுமை மா மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகளே திடீரென அதிகரித்துள்ளன. அடுத்து வரும் நாட்களில் மேலும் விலை அதிகரிப்பு ஏற்படலாமென அஞ்சப்படுகிறது.

சீனி கிலோ 90 ரூபாவாகவும் , அரிசி ஒரு கிலோ நூறு ரூபா முதல் நூற்றி ஐம்பது ரூபா வரையிலுமாக அதிகரித்துள்ளது.

வெளிச்சந்தையிலேயே இவ் அதிகரித்த விலையில் பொருட்களைக் கொள்வனவு செய்யவேண்டியதோர் நிலைக்கு குடாநாட்டு மக்கள் தள்ளப்பட்டிருப்பதாக அரச சார்பற்ற நிறுவனங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

No comments: