Saturday, 19 July 2008

கிளிநொச்சியைக் கைப்பற்றுவதே சிறீலங்காப் படையினரின் அடுத்த இலக்கு - ரம்புக்வெல

சிறீலங்காப் படையினரின் அடுத்த இலக்கு கிளிநொச்சியைக் கைப்பற்றுவதே என சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.


அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியைக் கைப்பற்றுவதே சிறீலங்காப் படையினரின் அடுத்த இலக்கு. கிளிநொச்சியை முழுமையாகக் கைப்பற்றி அதனைக் கொண்டாடும் நாள் வெகு விரைவில் இல்லை.

விடுதலைப் புலிகள் தற்போது பாரிய பின்னடைவுகளைச் சந்தித்துள்ளனர். விடத்தல் தீவை விடுதலைப் புலிகள் கைப்பற்றியது கடற்புலிகளினது தளபதி சூசைக்கு இது பாரிய தோல்வி என அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: