கொழும்பு முகத்துவாரம் கிம்புலாகலவில் வைத்து தமிழ் மக்கள் வீடியோ படமெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு உயர்நீதிமன்றம் சட்ட மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பில் தமிழர்கள் சர்வாதிகாரப் போக்கில் கைது செய்யபடுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2ம் திகதி அதிகாலை கிம்புலாகலவைச் சேர்ந்த தமிழர்களை விளையாட்டரங்கொன்றிற்கு கொண்டு சென்று வீடியோ படமெடுத்துள்ளதாக சட்டத்தரணி சுமந்திரன் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கு அவமானம் ஏற்படும் வகையிலான இந்த செயற்பாடு அரசியல் சாசனத்திற்கு புறம்பானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதவான் குழாம் இந்த மனுவை விசாரணை செய்தனர்.

No comments:
Post a Comment